Thursday, November 26, 2015

parinaama valarchi

பரிணாம வளர்ச்சியா=  பரிதாப தளர்ச்சியா?  

ஆரஞ்ச் டே  கொண்டாடப்பட்டதாக   முக நூலில்   பார்த்தேன்..  முதலில்  அது என்னவென்றே   தெரியவில்லை. பின்  வழக்கம் போல் இணையத்தில் தேடி  . தெரிந்து கொண்டேன்.  நவம்பர் 25  முதல்  டிசெம்பர்  10  ஆம் தேதிவரை  ஆரஞ்ச்  டேவாம் . பெண்களுக்கு  ஆதரவான  நாளாம் . 

80களில்   பாண்டி  கிளையில்  பணி   புரிந்தபோது  நவராத்திரி  விழா  கொண்டாடப்பட்டது . ஒவ்வுறு  நாளும்  மாலை  பூஜை  நடந்து  பிரசாதம்   வழங்கப்படும். அதற்கான செலவை  ஒவொரு   நாளுக்கு ஒவ்வொரு  துறை ஏற்றுக்கொள்ளும் . மகளிர் தோழர்கள்  சம்ப்ரதாய  பாடல்களையும்  பக்தி பாடல்களையும்   பாடுவார்கள் . பெண்மையை  சக்தியை    போற்றும் நாளாக  அந்த  தினங்கள்  கொண்டாடப்பட்டது


பின்பு  பல வருடங்கள் கடந்த  பின்  மார்ச் 8 ஆம் தேதி  மகளிர் தினம்  என்று  கொண்டாடப்பட்டது.  இந்த நாளில்  பெண்மையை போற்றும் விதமாக  கருத்தரங்கங்கள்  கவிதைகள்  கோல போட்டிகள்  நடத்தப்பட்டன.  அந்த கொண்டாட்டங்களில்  ஒரே மாதிரியான  நிறம்கொண்ட  ஆடைகளை  மகளிர்  தோழர்கள்  உடுத்தி வந்தது  அப்போது   பெரிய செய்தியாக  பேசப்பட்டது.

இப்போது  பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை  தடுக்கும் விதமாக  ஆரங்ஜ்  டே  கொண்டாடப்படுவதாக  அறிந்தேன்.   மகளிர் தோழர்கள்   ஆரஞ்ச்  பலூனுடன்  ஆரஞ்ச் நிற உடை உடுத்திய  படத்தினை முக நூலில்  பார்த்தேன்..

இன்னும் எத்தனை  தினங்கள்  மகளிர்க்காக  உருவேடுக்கப்போகிறதோ  தெரியவில்லை.

எது  எப்படியோ  புரட்சி தலைவர்  பாடியது  போல்  திருடனா  பார்த்து  திருந்தா விட்டால்  திருட்டை  ஒழிக்க  முடியாது.



No comments:

Post a Comment