Sunday, December 27, 2015

sava oorvalam

ஓரம் போ  ஓரம் போ  இறுதி ஊர்வல  வண்டி  வருது.==


சுமார் முப்பது  வருடங்களுக்கு  முன்பாக புதுவையில்  இறுதி  ஊர்வலம் எதிரில்   வருகிறது  என்றால்   பாதசாரிகள்  அப்படியே நின்று  விடுவர் .  சைக்கிளில் ,  ரிக்க்ஷாவில் , இரு சக்கர  வாகனங்களில் பயணிப்போர்  வண்டியை நிறுத்தி விட்டு  அந்த இறுதி ஊர்வலம்   தம்மை  கடந்து சென்றவுடன்  புறப்படுவார். அது இறந்தவருக்கு  செய்யும்  அஞ்சலி . இறந்தவரின் உடலில் வைக்கப்பட்ட மாலைகள்  தனியாக ஒரு வண்டியில் ஏற்றி  இடுகாட்டிலோ  சுடுகாட்டிலோ  மொத்தமாக  வைத்து விடுவார்கள்.  காவல் துறை  நண்பர்கள் தங்கள் தொப்பியை கழற்றி  கையில் வைத்து கொள்வார்கள் .இறுதி ஊர்வலம்  அவர்களை தாண்டியபின் தொப்பி வைத்து கொள்வார்கள்.

பின்  சில வருடங்களுக்கு  முன்  பேண்ட் வாத்தியம் முழங்க  இறுதி ஊர்வலம்  வெடி வெடிப்புடன்  வரத்தொடங்கியது.  மாலைகளை  பிய்த்து  சாலை  ஓரமாக போட்டு கொண்டு வருவார்கள்.

இப்போது இறுதி  ஊர்வலம் வருகிறது என்றாலே  பயமாய் இருக்கிறது.  காரணம்  மாலைகளை நாளா பக்கமும்  தூக்கி வீசுகிறார்கள்.  அதுவும்  மாலைகளாகவே  போடும்போது  மக்களுக்கு  பெரும் இடைஞ்சலை தருகிறது.   சரி ஊர்வலம்  வருகிறதே  என்று நின்றால்  முன்னால் வரும் இளைஞர் படையினர்  காரை  தட்டியும் ஸ்கூட்டரை எட்டி உதைத்தும்  எதிரில் வருபவர்களை  பீப் பாடலைவிட  மோசமாக திட்டுவதும்  வாடிக்கையாகி விட்டது. காரணம்  துக்கமாம்.  இறந்தவர்  வி  ஐ  பி  ஆகவோ    தாதா ஆகவோ இருந்து  விட்டால்  சொல்லவே  வேண்டாம் .  மக்களும் காவல் துறையும்  படும் பாடு.

இப்போது  புதுவையில்  இறுதி ஊர்வலம்  அமைதி ஊர்வலம்  என்ற நிலை
மாறி , ஆர்பாட்ட   ஆடம்பர  ஊர்வலம்  என்றாகி  விட்டது. 

No comments:

Post a Comment