Saturday, October 3, 2015

nadigar sanga thaerthal

தேவையா  இந்த பரபரப்பு ==

நடிகர் சங்க தேர்தல் - விஷால் அணி  = சரத்குமார் அணி  கமல் ஆதரவு  என்ற பத்திரிகைகளும்  ஊடகங்களும்  பரபரப்பு செய்திகளை  வெளியிட்டு வருகின்றனர். மக்களும் அதை ஆவலுடன் பார்கின்றனர்.

நண்பர்களே யோசித்து பாருங்கள் .. நாட்டில் எத்தனையோ சங்கங்கள் இருக்கின்றன . அரசியல்  சார் புடனும்  அரசியல் சார்பில்லாமலும்.  எல்லா சங்கங்களிலும் தேர்தல் நடக்கிறது . அது அந்தந்த சம்பத்தப்பட்ட  சங்கங்களின்  கடமை மற்றும் உரிமை.  நடிகர் சங்கத்தின் தேர்தலுக்கு  மட்டும் ஏன் இவ்வளவு முக்கியத்துவம்.  இது ரசிகர்களிடையே  கசப்பான  உணர்வுகளை தராதா.

எனக்கு தெரிந்து நடிகர் சங்கத்தில் அரசியல்  நுழைந்தது கிடையாது. இப்பொது அரசியல்  சாயம் மெல்ல மெல்ல பூசப்படுவது போல்  ஒரு தோற்றம் உருவாகி வருகிறது.  அது அவர்களின் பிரச்சனை நாம் கவலை பட  தேவையில்லை.  ஆனால் நம்மை பொருத்தவரையில்  சில விழயங்களில் கவலைப்பட்டே தீர வேண்டி இருக்கிறது.  நல்லதோ கேட்டதோ , தெரிந்தோ தெரியாமலோ  சினிமா  தமிழர்களின் வாழ்வுடன் ஒன்றி விட்ட ஒரு விழயமாகி விட்டது.   சரி நாம் ஏன் கவலை படவேண்டும் .

விஜய் ரசிகர்களும்  அஜீத் ரசிகர்களும்  இணையத்தில்  கலாய்த்து கொண்டிருப்பது  கொண்டிருப்பது , சற்று எல்லை மீறி கூட ==நாம் பார்த்து கொண்டிருக்கிறோம் .  ரஜினி கமல் ரசிகர்கள் மனோபாவமும் நமக்கு தெரியும் .  எம் ஜி யார்  சிவாஜி  காலத்தில் தொழிற் போட்டி இருந்தாலும் நடிகர் சங்கத்தில் அரசியல் புகவில்லை .மக்களுக்கும் அது ஒரு பெரிய விஷயமுமில்லை.

ஆனால் இப்போது கமல் விஷால் அணிக்கு ஆதரவு  இன்னும் பல நடிகர்கள் ஆதரவு  என்றும் அதே போல் சரத்குமார் அணிக்கு சில பிரபலங்கள் ஆதரவு
என்ற செய்திகளும்  அவர்களுடனே நிற்காது . அது அவரவர்  ரசிகர்மன்றங்கலிலும்  ஒரு  தாக்கத்தை உண்டு பண்ணும்..என்ன மாதிரி  தாக்கம் என்று உங்களுக்கே புரியும்.  எந்த அணி வெற்றி பெற்றாலும்  வெற்றியை இழந்த அணி  மீண்டும் சுமுகமாக  சங்கப்பணி யில் ஈடுபடமுடியுமா. .

நாடக நடிகர்களின் ஆதரவு எங்களுக்கு  இளைய தலைமுறையின் ஆதரவு எங்களுக்கு  என்று மாற்றி மாற்றி கூறி வரும்  இரு அணிகளும்  சற்று சிந்தித்து பார்த்து, தங்கள் வேற்றுமைகளை மறந்து  ஓரணியாய் இணைந்து  பதவிகளை பகிர்ந்து  சங்கத்தின்  செயல்பாடுகளை  செழுமை படுத்துங்கள் .

தற்போதை சினிமாவின் நிலை ?? விநியோகஸ்தர்  திரை அரங்க உரிமையாளர்கள்  கருத்து வேறுபாடு , படம் தோல்வி அடைந்தால்  நடிகர்களிடம் நஷ்ட ஈடு கேட்பது , குறிப்பிட்ட தேதியில்  படம் வெளியிட  முடியாத நிலை  சின்ன படங்களுக்கு திரை அரங்கு கிடைக்காத நிலை  என்று சினிமா உலகம் சிரம திசையில் இ ருக்கும்  போது   சங்கங்கள்  ஒற்றுமையுடன்  செயல்பட்டால்தான்  ஒரு நல்ல தீர்வு காண முடியும் .

சினிமா ஆயிரக்கணக்கான  தொழிலாளர்களின் வாழ்வாதாரம். பல கோடி பணம் புழங்கும் இடம் . திரைத்துறையின்  அந்தந்த சங்கங்கள் வலுவாக இருந்தால்தான் நியாயம் கிடைக்கும். இந்த பொறுப்பு  கூடுதலாக நடிகர் சங்கத்திற்கு உண்டு .

பத்திரிகையாளர்களே  ஊடகங்களே  உங்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள் .
 நடிகர் சங்க செய்திகளை வெளியிடுங்கள்  ஆனால் சரியான நோக்கத்தில் வெளியிடுங்கள்.  ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு  கொண்டாட்டம் என்று
சொல்லிக்கேட்டதுண்டு . நடிகரில் இரண்டு பிரிவு  நமக்கு பரபரப்பு என்ற ரீதியில் செய்திகளை வெளியிடாதீர்கள்.

ஊடக , வாசக  ரசிக  மற்றும் சினிமா ஆர்வலர்களே   நடிகர் சங்க தேர்தலை ஒரு சங்கத்தின் தேர்தலாக மட்டும் பாப்போம் , மற்ற  சங்கங்களின் தேர்வை போலே..

No comments:

Post a Comment