Tuesday, December 2, 2014

baalya ninaivugal

சற்றே பின்னோக்கி ---

வளரும் பருவத்தில்  விளையாட்டும் நம்முடன் சேர்ந்து தானே வளர்ந்தது.
எத்தனை எத் தனை விளையாட்டுகள்  .கிட்டிபுல் , கோலிகுண்டு, ஆபியம் மணி ஆபியம் என்று சொல்லி பச்சை குதிரை தாண்டுவது  பேய்பந்து என்று பந்தால் ஒருவரை ஒருவர் அடித்து கொள்வது  என்று இன்னும் சொல்லிகொண்டே போகலாம்.  இதெல்ல்லாம் இப்ப எதற்கு என்கிறீர்களா?  விஷயம் இருக்கு.

இரண்டுநாட்களுக்கு முன் ஒரு நண்பரை  சந்தித்து பேசிகொண்டிருந்தேன்..பேச்சு பழங்கால இலக்கியம் பற்றியும்  அந்தகால விளையாட்டுகள் எப்படி  வாழ்வுடன்  இணைந்திருந்தது  என்பது பற்றியும் இருந்தது. அப்போது நண்பர்  ஒரு இதழில் தான் படித்த செய்தியை என்னுடன் பகிர்ந்து கொண்டார்.

நாமெல்லாம் சிறு வயதில்  மேலே கொக்கு பறக்கும்போது  அனைவரும் அண்ணாந்து பார்த்து இரண்டு கை விரல்களையும்  ஒன்றின் மீது ஒன்றை  தேய்த்து   கொக்கே கொக்கே பூ போடு  என்று விளையாடியது ஞாபகம் இருக்கிறதா . அந்த விளையாட்டை பற்றிதான்  இந்த பதிவு.

மடையான் மடையான் பூபோடு    மடிக்கு இரண்டு பூபோடு  .என்பதுதான் பாடல்.
மடையான் என்பது  கொக்கு போன்ற ஒரு பறவை. அது கார்திகை  மாதத்தில்
இடம் பெயர்ந்து  தமிழக பகுதி குறிப்பாக  காவிரி டெல்டா  பகுதிக்கு இரை  தேட  வயல் பகுதிக்கு வரும்.

அப்போது வானத்தில் மடையான்கள் பறக்கும் போது  சிறுவர்கள்  மடையான் மடையான் பூப்போடு   மடிக்கு இரண்டு பூபோடு  என்று சொல்லி நகத்தை உரசிக்கொல்வார்கள்.    இதில் மடி  என்பது  மடையான் பறவையின் எச்சம் .
மடையான் பறவையின் எச்சம் வயல்களுக்கு மிக சிறந்த உரம் . எனவேதான்
மடையன்கள் கூட்டம் கூட் டமாக  பறக்கும்போது  எங்களது வயல்களுக்கு அதிக உரம் போடு என்பதாக அந்த விளையாட்டு இருக்கும். சிறுவர்கள் கூட்டமாக   கூச்சல் இடும்போது  பறவைகள் அச்சத்தினால் எச்சம் அதிகம் இடும் என்பது எதிர்பார்ப்பு.

இந்த . விளையாட்டில் இப்படி ஒரு பொருளா என் நான் வியந்தேன். 

1 comment: