Wednesday, November 26, 2014

தோழர்  80 சதவிகிதம்  உண்மை. ஒரு ஆலிவூட்  இயக்குனர் , அடுத்தவர்  கனவுகளையும் திருடலாம்   என்ற  கருவை வைத்து  ஒரு திரைப்படம் தயாரித்தார் . அது சாத்தியமா இல்லையா என்று  தெரியாது.  ஆனால் உங்களுக்கு அந்த ரசவதாம் நன்றாகவே  வந்திருக்கிறது. பதவிக்கு மரியாதை.  தங்களின் கதை படிக்கும்போதே  காட்சியாக விரிகிறது. இயல்பான நடை.நன்று .

நிற்க ,  இந்த கதையை உங்கள் அனுமதியுடன்  என் நோக்கில் முடிக்க  ஒரு முயற்சி  இதோ.   "  நடைபயிற்சி  முடித்து  வீடு திரும்பும் போது வாசலில்   
அலுவலக நண்பர், என்னைபார்த்து   இந்தா  ரொம்ப நாளா  நீ கேட்ட  புத்தகம்           THE RISE AND FALL OF  THE THIRD REICH  என்னிடம் ஒரு புத்தகத்தை கொடுத்தார்.  உள்ள வாங்க ஒரு காப்பி  குடிச்சுட்டு போலாம்னு சொன்னேன். அதுக்கு  நேரமில்லை  உடனே போகணும்னு சொல்லிட்டு என் பதிலுக்கு கூட காத்திராமல்  சென்று விட்டார்.  உள்ளே நுழைந்ததும்   தொலைபேசி   அலற , அதில்  சிலவருடங்களுக்கு முன்னே பணியில்  சேர்ந்த ஒரு நண்பர்  சார்  நல்ல இருக்கீங்களா  என்று கேட் டு விட்டு, வருகிற 23  ஆம் தேதி  பல்கலை அரங்கில்  உலக தமிழர்  இணைய   மாநாடு  சார், எல்லாபகுதியில் இருந் தும் கணித அறிஞர்கள் கலந்டுகிறாங்க . பயன் உள்ளதா இருக்கும்  சார் ரெண்டு   பேரும் போவம்  சொல்லிட்டு தொலைபேசியை  வைத்து விட்டார்..   நான் தொடர்ந்து வீட்டில்  செய்ய வேண்டிய வேலைகளை  தொடர்ந்தேன்.  மீண்டும்  அழைப்பு மணி  என் கைபேசியிலிருந்து.  அலுவலக  சகோதரி  ஒருவர்   வழக்கம் போல் சினிமா சம்பத்தப்பட்ட  சந்தேகம் . சார்,   மாதமோ ஆவணி  மங்கையோ மாங்கனி  என்ற பாடலில் வரும் ஹம்மிங் குரல் SPB  தானே.  இல்லம்மா  நினைப்பது  நிறைவேறும்  நீயிருந்தால் என்னோடு  என்ற பாட லை பாடிய   m.l. ஸ்ரீகாந்த்  குரல்மா   என்று  சொல்லி  பரஸ்பர விசாரிப்புகளுக்கு பின்  உரையாடல் முடிவிற்கு வந்தது.  அதன் பின் அலுவலகம் எதிரில் உள்ள  தேநீர் கடையின் பையன் பள்ளியில் தான் பெற்ற பரிசுகளை  என்னி டம் காட்ட  நேரில் வந்தது , இன்னும் பலர்   வந்தது  எனக்கு மிகவும்  மகிழ்வை தந்தது.  சென்ற வருடம் நான் என் மனைவியை பார்த்த பார்வையில் இருந்து முற்றிலும் வேறுபட்ட பார்வை  இன்று நான் பார்ப்பது. காரணம் ஒப்பனை  இல்லா  நட்புகள், எந்த வித எதிர்பார்புமிண்றி  என் பலகீனங்களை அப்படியே ஏற்றுகொண்ட  நட்புகள்  எதுவென்று எனக்கு குட்டு வைத்து புரியவை ய்த்த சென்ற  ஆண்டு பிறந்த நாளை  வாழ்த்துகிறேன். 

No comments:

Post a Comment