Tuesday, November 11, 2014

மழைகால மேகம் ஒன்று

காலங்கள் மாறும்போது....

இதோ மழை சீராக பெய்து கொண்டிருக்கறது. என் பள்ளி நாட்களின் நினைவிற்கு செல்கிறேன் .

வாகன வசதிகள் இல்லாத காலம் . உள்ளூர் செய்திகள் வராத பத்திரிகைகள்.
தொலைக்காட்சி, கைபேசி , இணையம் சாத்தியம் இல்லாத காலம்.
மழை காலம் தொடங்கும்போது  மேக  மூட்டம் வருகிறதா என்று .   மாணவர்கள் வானத்தை பார்த்தபடியே பள்ளி செல்வோம்.

மேகத்தை கண்டு  விட்டால்  பாதி  கிணறு தாண்டிய சந்தோசம். பாதி கிணறு தாண்டியதால் என்ன சந்தோசம் என்று கேட்காதீர்கள் . அன்று எங்களுக்கு அது அப்படித்தான்.  பள்ளி சென்றதும், வகுப்பு தொடங்கியதிலிருந்து  வகுப்பின் வாசலையே பார்த்து கொண்டிருப்போம்.  நேரம் எங்களது பொறுமையை சோதிக்கும் . அவர் வருவாரா  மாட்டாரா என்று  காசை சுண்டி பாப்போம். இரு விரலை ஒன்றை  தொடு என்று ஜோசியம் பாப்போம்.  காக்கா  ஏதாவது  கத்துகிறதா என்று பாப்போம். நாலைந்து காகா கத்தும் . பாவம் அது மழைலே நனைஞ்சி குளிரால் கத்தும் . ஆனாலும் காக்கைகளை கரித்து கொட்டுவோம். காக்கை கத்தினால் யாரவது  வருவார்கள் என்ற நம்பிக்கை ஊட்டப்பட்டு வளர்ந்தவர்கள்  நாங்கள். ஊஊம்  அவர் வரமாட்டார் .

நாங்கள் சோர்ந்து பாடத்தை கவனிக்க தொடங்கும் பொது , திடீரென்று பிரசன்னமாவார்.  உடனே எங்கள் ஒட்டு மொத்த பார்வையும்  அவரின் கையை நோக்கி பயணிக்கும். ஏதாவது பேப்பர்  வைத்திருக்கிறாரா என்று.
அவர்  ஆசிரியரை நோக்கி  சீராகத்தான் செல்வார். எங்களுக்கு அவர் மெதுவாக போவது போலவே தோன்றும்.  அவர் தன கையிலுள்ள பேப்பரை ஆசிரியரிடம்  கொடுத்து கையொப்பம் பெற்றுக்கொண்டு போய்விடுவார்.

இந்நேரம் அவர் யார் என்று நீங்கள் யூகித்திருந்தால்  உங்களுக்கு நீங்களே சபாஷ் போட்டு கொள்ளுங்கள்.    ஆம் பள்ளியின் கடை நிலை ஊழியர்தான் அவர். அவர் கையில் எடுத்து வந்தது ஒரு சுற்றறிக்கை . அன்றைய நிலையில் சுற்றறிக்கை என்றாலே  பள்ளி விடுமுறை பற்றிதான் . இப்போது புரிந்ததா எங்களின் தவிப்புகள் . எங்கள் ஆசிரியர்கள் ஒரு சாடிஸ்ட் {சாடிஸ்ட் என்ற வார்த்தைக்கு உடனடியாக தமிழ் அர்த்தம் தெரிய வில்லை} சுற்றறிக்கையை உடனே படிக்க மாட்டார். தண்ணி குடிப்பார். பக்கத்துக்கு வகுப்புல  கோமதி டீச்சர் வந்துட்டங்களானு பாத்துட்டு வா  என்று யாரையாவது அனுப்புவர். அவரால்  அந்த   சுற்றறிக்கையை  எவ்வளவு தாமதபடுத்தி  படிக்க முடியுமோ அவ்வளவு தாமதப் படுத்துவார். அதில் இ ன்றும் நாளையும் பள்ளி வ்டுமுறை
என்று இருக்கும். ஆனாலும் மறக்காமல்  டேய் பசங்களா  மதிய உணவை வாங்கிட்டு போயடுங்கடா . வீணா  போய்டும்  எல்லாரும் நிறையா வாங்கிகிட்டு  வழிலே யாராவது சாப்பாடு  இல்லாம  இருந்தாங்கன்னா  அவங்களுக்கு கொடுங்கடா என்றும் சொல்லுவார். காய் கறிகளை திருடுவதோ  பொய் கணக்கு காண்பிப்பதோ அப்போது அறவே இல்லை.

எதுக்கு இவ்வளவு பீடிகை ??  ஒன்னும் இல்லீங்க  இப்ப  எப்படி இருக்குன்னு நெனைச்சேன்.   பசங்க  அப்பா டிவில  ரமணன் அங்கிள் என்ன சொல்றார்னு
பாருங்க . ஐயோ அவரு லோக்கல்  டிவில  வரமாட்டாரு  என்  ஒரு குரல் கத்த
தொலைக்காட்சி உள்ளூர்  ஒளிபரப்பிற்கு தாவ  பள்ளிகளுக்கு விடுமுறை  என்று செய்தி ஓடும். உடனே  கல்லூரிகளுக்கு  என்னாச்சி என்று  மறுபடியும் தொலைகாட்சிக்கு கண்கள் தாவ  குழப்பமோ குழப்பம். ஏன்னா  பள்ளிகல்விக்கு  ஒரு இயக்குனர். கல்லூரி  கல்விக்கு ஒரு இயக்குனர்  .

ஆனா பசங்க ரொம்ப தெளிவுங்க .  ரமண சொல்றதை  கேட்டுடாங்க  இவங்களே  முடிவு பண்ணிடுவாங்க. விஜய் டிவில சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியிலே  பாடகர்களை தயார்படுத்தி உடுவாரே   தாடி வச்சிக்கிட்டு  பேர்கூட ஆனந்த்துவோ என்னவோ அவருக்கு இருக்கிற  job security மாதிரி  ரமணன் சார்  வாக்கு அவ்வளவு  உத்தரவாதம். .

ஒரு வாரமாக ரமணண் சாரை காணவில்லையாம் . ரஜினி படம் ரிலீசாகாத  ரசிகன் மாதிரி பசங்க நொந்து  போய்ட்டாங்க .  இப்ப மறுபடியும் வந்துட்டாராமே .

அன்றும் இன்றும் என்றும் மற்றவர்களுக்கு எப்படியோ  பசங்களுக்கு மழை என்றாலே குதூகலம்தான்.




No comments:

Post a Comment