Wednesday, October 29, 2014

kavignar vaali

நண்பர்கள் சிலர் இன்று கவிஞர் வாலியை பற்றி பதிவு செய்திருந்தார்கள். இன்று அவருடைய பிறந்த  நாளாம்.                                                                                  எனக்கு என்ன்னவோ பாடலாசிரியர்களில்  என்னை மிகவும் கவர்ந்தவர் கண்ணதாசன்தான்.  ஆனாலும் வாலியின்  சில பாடல்களில்  என்னை இழந்து இருக்கிறேன்.. பாடலை கேட்கும்போது  கண்ணீர் விட்டிருக்கிறேன்.  அதில் சில பாடல்கள். 

1.         அம்மா என்றைழைக்கத உயிரில்லையே  என்ற பாடலில் வரும் 
             வரிகள்.      ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உழைத்தாலும் -- உனக்கிங்கு நான் பட்ட கடன் தீருமா -- இந்த வரி வரும்போது என்னை அறியாமலே கண்களில் நீர் கசியும்.  இந்த வயதிலும் கூட  எண்பத்தி  ஆறு வயதான என் அம்மா  அறுபத்தி இரண்டு வயதான என்னை  நீ சின்ன பையன்டா  ஒனக்கு ஒன்னும் தெரியாது , வேளா  வேளை க்கு சாப்பிடு  அப்படின்னு சொல்லும்போது வாலியின் இந்த பாடல் வரிகள்தான் ஞாபகம் வரும்.   இந்த பாடலின் வரிகளை ஒரு கோவில் சுவற்றில் கூட எழுதி வைத்தி ருப்பதாக  என் நன்ப ர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன். 


2.           இந்திய நாடு என்வீடு  என்ற பாடலில்    வருவதை பகிர்ந்து உண்போம்  வந்தே மாதரம் என்போம்  என்ற வரிகள் வரும்போது  என்னை அறியாமலேயே  என் கரங்கள் உணர்ச்சி மேலீட்டால்  நடுங்க தொடங்கும். 


3.            இதோ எந்தன் தெய்வம் முன்னாலே  என்ற பாடலில் == பல நூல் படித்து நீ அறியும் கல்வி - பொது நலம் நினைத்து நீ வழங்கும் செல்வம்  பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம்  இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்  என்ற வரிகள் வரும்போது  சிந்தை  சிலிர்கிறது.

4.             கண்ணன் ஒரு கைக்குழந்தை   கண்கள் சொல்லும் பூங் கவிதை  .-
நிச்சயம் கேட்டிப்பீர்கள் இந்த பாடலை .  இளைய ராஜாவின் இதயத்தை வருடும் இசையில்  வாலியின் வரிகள்  இனிமையான தாம்பத்தியத்தை அழுத்தமாக எடுத்துரைக்கும்  .  ஏழ் பிறப்பும் இணைத்திருக்கும் சொந்தம் இந்த சொந்தம் அம்மா==  வாழ்விருக்கும் நாள் வரைக்கும் தஞ்சம் உந்தன் நெஞ்சம் அம்மா  --அன்ன மேவும் கைகளிலே ஆடி வரும் பிள்ளை இது == உன்னருகில் நான் இருந்தால் ஆனந்தத்தின் எல்லை அது.  அற்புதமான வரிகள்.  

5.                                                                                                                                                        ஆனந் த துள்ளலுக்கு  முக்காலா  முகாபுலா  லைலா 

 கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உன்னை  மறவேன் -பக்திக்கு. 

நானும் வாலியை நினவு கூறுகிறேன். 



.            

No comments:

Post a Comment